வாக்குறுதியில் சொன்னதை செய்த பஞ்சாப் அரசு - பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.;
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்கள் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்தின. இந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதம் ஓய்வூதியம் பெறுவர் இந்த மாதாந்திரைய ஓய்வூதியமானது பொதுவாக அவர் கடைசியாக வாங்கி சம்பளத்தில் பாதியாகும். அந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை ஓய்வூதிய நிதிக்கு செலுத்துவர் அவர்கள் ஓய்வு பெறும்போது ஒட்டுமொத்தமாக குறிப்பிட்டு தொகையை பெறுவர்.
ஓய்வூதிய திட்டம் கடந்து 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கைவிடப்பட்டது மேலும் புதிய ஓய்வூதிய திட்டம் 2004 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் ஆட்சியில் இருக்கும் அம ஆத்மி கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என கூறியது குறிப்பிடத்தக்கது.