பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் தூக்கில் தொங்கினார் - தீவிர விசாரணையில் போலீசார்
பிரபல நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
பிரபல நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காசியாபாத் நகரில் உள்ளது ராடிசன் ப்ளூ ஹோட்டல், இந்த ஹோட்டலில் உரிமையாளர் அமித் ஜெயின், இவருக்கு கிழக்கு டெல்லியில் வீடு உள்ளது. அந்த வீட்டில் மின் காத்தாடியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இது குறித்த போலீஸ் தற்பொழுது விசாரித்து வருகின்றனர். மேலும் நொய்டாவில் இருந்து காசியாபாத் நகருக்கு வீட்டுக்கு வரும் வழியில் தனது சகோதரர் கரணை அலுவலகத்தில் இறக்கிவிட்டு காரை தனியாக ஓட்டிக்கொண்டு அமித் ஜெயின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அமித் ஜெயினின் மகன் எதையோ மறந்துவிட்டதால் வீட்டுக்கு தனது டிரைவருடன் சென்ற பொழுதுதான் தந்தை தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.