பயங்கரவாத கணக்கு பண பரிமாற்றங்கள் - உடனே வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி

பயங்கரவாதிகளின் கணக்கு விபரங்களை அளிக்க வேண்டும் என வங்கிகளுக்கு புதிய உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

Update: 2022-10-28 14:43 GMT

பயங்கரவாதிகளின் கணக்கு விபரங்களை அளிக்க வேண்டும் என வங்கிகளுக்கு புதிய உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 10 பேரை மத்திய உள்துறை அமைச்சகம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக சமீபத்தில் அறிவித்தது.

இவர்களில் சிலர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் தற்போது பாகிஸ்தானில் உள்ளனர். இந்நிலையில் வங்கிகள் உட்பட அனைத்து நிதி தொடர்பான அமைப்புகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளோரின் பெயர்களில் துவங்கப்பட்ட வங்கி கணக்குகள், முதலீடுகள் உள்ளிட்ட விபரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Source - Dinamalar

Similar News