மதம் மாற மறுத்த காதலியை 4வது மாடியில் இருந்து தள்ளி, கொன்ற நபரை என்கவுண்டரில் காலி செய்த போலீஸ்

Update: 2022-11-20 07:03 GMT

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரை சேர்ந்தவர் சுபியான். இவர் பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து தள்ளி விட்டு அந்த இளம்பெண் கொல்லப்பட்டு உள்ளார் என பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

நிதி குப்தா என்ற அந்த இளம்பெண்ணை மதம் மாறும்படி சுபியான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார் என்று குடும்பத்தினர் எப்.ஐ.ஆர். புகாரில் தெரிவித்து உள்ளனர். காயமடைந்த அந்த இளம்பெண் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலை கழகத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

தப்பியோடிய சுபியான் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தலைக்கு ரூ.25 ஆயிரம் பரிசும் அறிவித்து தேடி வந்தனர்.இந்நிலையில், சவுராஹா பகுதியில் பவர் அவுஸ் அருகே போலீசாருக்கும், பதுங்கியிருந்த சுபியானுக்கும் இடையே நேற்று நீண்ட என்கவுண்ட்டர் நடந்துள்ளது. இதில், சுபியானை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த சுபியானை அதே கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலை கழகத்தில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.


Similar News