அதிக வாடிக்கையாளர்களுடன் நாட்டின் முன்னணி நிறுவனமாக உயர்ந்த ரிலையன்ஸ் ஜியோ - பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை விட தனியார் நிறுவனமான ஜியோ 7.3 மில்லியன் சந்தாதாரர்களுடன் பெரிய வயர்லஸ் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை விட தனியார் நிறுவனமான ஜியோ 7.3 மில்லியன் சந்தாதாரர்களுடன் பெரிய வயர்லஸ் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய வயர்லஸ் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளதாக ட்ராய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 7.1 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை விட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 7.3 மில்லியன் சந்தாதாரர்களுடன் மிகப்பெரிய வயர்லஸ் நிறுவனமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் முடிவடைந்த ஆகஸ்ட் மாதத்திற்கான மாத சந்தா அறிக்கையில் 32.8 லட்சம் சந்தாதாரர்களை ஜியோ'வும் 3.2 லட்சம் சொந்தகாரர்களை பாரதி ஏர்டெல் நிறுவனமும் சேர்த்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 7நாட்டின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உயர்ந்துள்ளது.