மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு: தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் மத்திய அரசு!
மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு
தீவிரவாதிகளால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்த குடும்பங்கள், நிரந்தர ஊனமுற்றோர் மற்றும் தீவிரவாத தாக்குதலில் கடுமையான காயம் அடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2022-23 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மத்திய அரசின் பங்கில் இருந்து பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.
நிபந்தனை
ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டு திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
Input From: Hindustan Times