மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து அவசியமில்லை!

Update: 2022-11-14 10:08 GMT

எஸ்.சி அந்தஸ்து 

1947ல் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1956-ம் ஆண்டில் சீக்கிய மதம், 1990-ம் ஆண்டில் பவுத்த மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. பிரிவுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியவர்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2004-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 

வெளிநாட்டு மதங்கள்

கிறிஸ்தவம், முஸ்லிம் மதங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. அந்த மதங்களில் சாதிய நடைமுறை கிடையாது. தீண்டாமை கொடுமை கிடையாது. எனவே பல்வேறு காரணங்களால் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு கூறியது. 

ஆணையம் அமைப்பு 

மதம் மாறிய தாழ்த்தப்பட் டோருக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க கோருவது குறித்து ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் 2 ஆண்டுகளில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என கூறப்பட்டுள்ளது. 

Input From: Hindu 

Similar News