தனியார் பள்ளி ஆசிரியர் பெயரில் சிம் கார்டு, கோவையில் முகாம் - மங்களூரு குண்டு வெடிப்பு தீவிரவாதி ஷாரிக் குறித்து வெளிவரும் பயங்கர தகவல்கள்
மங்களூர் குண்டு வெடிப்பு சதி தொடர்பாக குண்டு விடுப்பு நிகழ்த்திய ஷாரிக்கிடம் என்.இ.ஏ போலீசார் விசாரணை நடத்தினர்.;
மங்களூர் குண்டு வெடிப்பு சதி தொடர்பாக குண்டு விடுப்பு நிகழ்த்திய ஷாரிக்கிடம் என்.இ.ஏ போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 23ஆம் தேதி கோட்டை ஈஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமோசா முபீன் என்பவர் பலியானார். இதனையடுத்து போலீசார் நடத்திய அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக அப்சல்கான், அசாருதீன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மங்கூரில் ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் குண்டு வெடிப்புக்கு மூல காரணமாக இருக்கும் என பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் ஷாரிக் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குக்கர் வெடிப்பு ஆசாமி முகமது ஷாரிக் கடந்த மாதம் கோவில் காந்திபுரம் பகுதியில் லாட்ஜில் தங்கி இருந்த பொழுது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
தற்போது அவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திய முகமது ஷாரிக் அவரது அறையில் தங்கி இருந்துள்ளார். அப்போது சுரேந்திரனின் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியுள்ளார். இதனை அறிந்த தனிப்படை போலீசார் சுரேந்திரனை கோவை அழைத்துச் சென்ற விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பில் பலியான ஜெமோசா முபீனை சந்தித்தது சதி திட்டம் தீட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் கோவையில் முதலில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை விசாரித்த தனிப்படை போலீசாரும் மங்களூர் விரைந்துள்ளனர்.
இந்நிலையில் மங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ போலீசார் நேற்று விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.