பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க சவுதி அரேபியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம்: ரூ.41,500 கோடிக்கு விற்க இலக்கு!

Update: 2022-10-27 02:36 GMT

உலக நாடுகள் ஆர்வம்:

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆர்வமாக உள்ளன. 2025ஆம் ஆண்டுக்குள் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பின்னணி:

இந்தியா-ரஷ்யா இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க கடந்த 1998-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன. இந்தியாவின் Brahmaputra) நதி, ரஷ்யாவின் Moskva நதியின் பெயர்களில் இருந்து BrahMosஎன்று பெயரிடப்பட்டது.  பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இந்த பெயர் வைக்கப்பட்டது.

2001ல் பிரம்மோஸ் ஏவுகணை முதல்முறையாக சோதனை செய்யப்பட்டது. பிறகு நீர், நிலம், வான்பரப்பில் இருந்து ஏவும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. பின்னர் முப்படைகளிலும் பிரம்மோஸ் சேர்க்கப்பட்டது.

ஏவுகணையின் திறன்

இப்போது பிரம்மோஸ் ஏவுகணை களை நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும். இது உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாகும்.

28 அடிநீளம், 2 அடி விட்டம், 3,000 கிலோ எடைகொண்ட பிரம்மோஸ் ஏவுகணை ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப்பாயக்கூடியது. இந்த ஏவுகணையின் வேகம், பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச்சில் நடத்தப்பட்ட சோதனையின்போது பிரம்மோஸ் ஏவுகணை 450 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கை தாக்கி அழித்தது.

அடுத்த தலைமுறை மேம்பாடு 

பிரம்மோஸின் அடுத்த தலைமுறை ஏவுகணை சோதனை நடக்கிறது. எடை பாதியாக குறைக்கப்படுகிறது. போர்க்கப்பலில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸின் எடை 3,000 கிலோவாகவும் போர் விமானத்தில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸின் எடை 2,500 கிலோவாகவும் உள்ளது.

புதிதாக தயாரிக்கப்படும் பிரம்மோஸ் என்.ஜி. ஏவுகணையின் எடை 1,330 கிலோவாக இருக்கும். இதன்மூலம் போர் விமானங்களில் இருந்து மிக எளிதாக ஏவ முடியும். 2024ம் ஆண்டு தொடக்கத்தில் பிரம்மோஸ் என்.ஜி. ஏவுகணையின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. 

Input From: reuters

Similar News