தினம் தினம் தாக்குதல் - ஜம்முவுக்கு படையெடுக்கும் பண்டிட் குடும்பங்கள்!

Update: 2022-10-28 05:38 GMT

பண்டிட் மீதான தாக்குதல் 

ஜம்மு- காஷ்மீரில் 1990களில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இப்போது பண்டிட் குடும்பங்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. அவர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் அதிகரித்துவிட்டன. பண்டிட்களை குறி வைத்து நடக்கும் தாக்குதலில்  சுட்டுக்கொலை செய்யப்பட்டு வருகின்றனர். சோபியான் மாவட்டத்தின் செளத்ரிகண்ட் கிராமத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பண்டிட் முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இடம்பெயரும் மக்கள் 

குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே காஷ்மீரில் இருக்க வேண்டும் என ஒரு தரப்பினர் தீவிராவத செயல்களை ஊக்குவிக்கின்றனர். முன்னதாக மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களினால், சோபியான் மாவட்டத்தில் வசிக்கும் பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.  சோபியான் மாவட்டம் செளத்ரிகண்ட் கிராமத்தை விட்டு 10 பண்டிட் குடும்பங்கள் வெளியேறி ஜம்முவுக்கு சென்றுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலேயே இடம்பெயர்கிறோம் என்கின்றனர். 

Input From: deccanherald

Similar News