காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு குவியும் நிதி - களமிறங்கியது என்.ஐ.ஏ!

Update: 2022-10-12 09:26 GMT

ஜமாத்-இ-இஸ்லாமி, ஜம்மு காஷ்மீர் என்ற அமைப்பு ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 

இந்த அமைப்பை சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 2019ல் அறிவித்தது. தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அரசு கண்காணித்து வந்தது. 

முறைகேடாக பெற்ற பணத்தை தீவிரவாத செயல்களுக்காக ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளுக்கு மாற்றி விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 4 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் 6 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. அப்போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் ரஜவுரி, பூஞ்ச், புல்வாமா, ஷோபியான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. சிஆர்பிஎப் மற்றும் உள்ளூர் போலீஸார் உதவியுடன் என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

ஜமாத்-இ-இஸ்லாமி மீதான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Input From: Zee News 

Similar News