'டெட்' தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணிகளுக்கு அரசு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி என்று ஆணைப்பிறப்பித்தது. இதனால் ஆசிரியர்கள் தகுதி தேர்வை எழுதினர். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும் என கூறப்பட்டிருந்தது. மீண்டும் ஒருவர் ஆசிரியர் பணிக்கு சேர வேண்டும் என்றால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாக இருந்தது.
இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சகம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது: 2011ம் ஆண்டு முதல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். 7 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் அவர்களுக்கு மீண்டும் சான்றிதழை திருத்தி தரவேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவால் லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய அரசுக்கு நன்றி¬யும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.