மேக் இந்த இந்தியா திட்டத்தின் அடுத்த பாய்ச்சல் - இந்தியாவில் தயாராகி ரஷ்யா செல்லவிருக்கும் ஏ.கே 203 துப்பாக்கிகள்
ரஷ்ய தொழில் நுட்ப பரிமாற்றத்துடன் இந்தியாவில் ஏ.கே 203 ரக துப்பாக்கி தயாரிக்கப்பட உள்ளது.
ரஷ்ய தொழில் நுட்ப பரிமாற்றத்துடன் இந்தியாவில் ஏ.கே 203 ரக துப்பாக்கி தயாரிக்கப்பட உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோர்வாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏ.கே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் இருந்து தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் நான்கு லட்சத்திற்கும் அதிகமான ஏகே 203 ரக துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய கோர்வா ஆட்னஸ் தொழிற்சாலை தயாராக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டில் தொடக்கத்தில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் தயாராகும் துப்பாக்கிகள் ரஷ்யாவிற்கு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.