உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் இருக்கிறது - ஜி 20 மாநாட்டில் உலக தலைவர்களுக்கு வகுப்பெடுத்த பிரதமர் மோடி
'உக்ரைன் ரஷ்யா மோதலை ராஜாங்க ரீதியில் தீர்க்க வேண்டும்' என ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியுள்ளார்.;
'உக்ரைன் ரஷ்யா மோதலை ராஜாங்க ரீதியில் தீர்க்க வேண்டும்' என ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி 20 நாடுகளில் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதற்காக இந்தோனேசியாவுக்கு சென்ற பிரதமர் மோடி பல்வேறு உலக நாடு தலைவர்களை சந்தித்து பேசினார் இரண்டு நாடுகள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 'கொரோனா தொற்றுக்குப் பிறகு உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் இருக்கிறது. அமைதி நல்லிணக்கம் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டத் தீர்மானம் தேவை. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான பாதையை கண்டெடுக்க வேண்டும் என நான் பலமுறை கூறியுள்ளேன். உக்ரைனின் மோதலை ராஜதந்திரம் மூலம் தீர்க்க வேண்டும்.
இந்த போரினால் உலகளாவிய உணவு எரிபொருள் விநியோக சங்கிலி சீர்குலைந்து இருக்கிறது, கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது அன்றைய தலைவர்கள் உலகம் அமைதிப் பாதையில் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டனர். இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதார நாடு எனவே எரிசக்தி விநியோகத்தில் எந்தவித கட்டுப்பாடுகளையும் நாம் ஊக்குவிக்க கூடாது தூய்மையான எரிசக்தி சுற்றுச் சூழலுக்கு இந்தியா உறுதியாக இருக்கிறது' என கூறினார் பேசினார்.