ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்த சில மணி நேரத்தில் 3000 விசா வழங்குவதாக அறிவித்த இங்கிலாந்து - கெத்து காட்டும் பிரதமர்

ஆண்டுதோறும் 3000 இந்தியர்களுக்கு க்ரீன் விசா வழங்குவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.;

Update: 2022-11-17 03:31 GMT

ஆண்டுதோறும் 3000 இந்தியர்களுக்கு க்ரீன் விசா வழங்குவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியும், இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்த சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலமாக பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலான இந்த விசாவை பெற்று இரண்டு ஆண்டுகள் வரையில் இங்கிலாந்தில் பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சந்திப்பின் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது இங்கிலாந்து கணவோடு எதிர்பார்த்து நிற்கும் பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.



Source - Polimer News

Similar News