3 மாத அவகாசம் கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம் - திருத்தங்களுடன் 2023'ல் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாஸ்டர் பிளான்
குடியுரிமை திருத்த சட்ட விதிகளை உருவாக்க கால அவகாசத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட விதிகளை உருவாக்க கால அவகாசத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட விதிகளை உருவாக்க கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சட்ட விதிகளை முறைப்படுத்தி யாருக்கும் பாதிப்பு இல்லாத வண்ணம் குடியுரிமை சட்ட விதிகளை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும். 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அமல்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள நாடாளுமன்ற சட்டத்திற்கான உள்துறை அமைச்சகம் ஆறாவது முறையாக கூடுதல் அவகாசம் கூறியுள்ளது. இந்த 3 மாத அவகாசத்திற்குள் குடியுரிமை திருத்த சட்ட மசோதா விதிகள் நிர்ணயிக்கப்படுமாயின் வரும் 2023 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் இருந்து குடியுரிமை திருத்த சட்ட மசோதா அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.