இந்தியாவின் உதவியால் உலக பொருளாதார முன்னேற்றம் அடையும் - அடித்து சொல்லும் மத்திய அமைச்ச பியூஸ் கோயல்

வருங்காலத்தில் உலகையே இந்தியா வழி நடத்தும் என மத்திய அமைச்சருக்கு பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

Update: 2022-11-16 03:32 GMT

வருங்காலத்தில் உலகையே இந்தியா வழி நடத்தும் என மத்திய அமைச்சருக்கு பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

புது தில்லியில் 41வது இந்திய சர்வதேச வர்த்தக திருவிழா துவக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, 'பிரதமர் மோடி கடந்த எட்டு ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இதனால் உலக பொருளாதாரத்தில் பிரகாசம் நிறைந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது' என்றார்.

மேலும் பேசிய அவர், 'இந்தியாவின் உதவியால் உலக பொருளாதார முன்னேற்றம் அடையும். வருங்காலத்தில் உலகையே இந்திய வழிநடத்துச் செல்லும் பிரதமரின் கதி சக்தியை யோஜனா திட்டம் இந்தியாவின் உட்கட்டமைப்பில் புரட்சி நிகழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இது இந்தியாவில் முழுமையான கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும்' என பியூஸ் கோயல் கூறினார்.


Source - Dinamalar

Similar News