கேரளாவில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை எரித்து முழக்கம்!

Update: 2022-11-08 12:20 GMT

ஹிஜாப் கட்டாயம்

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் அணியும் ஆடைகளை கண்காணிக்க காஸ்த் எர்ஷாத் என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொது இடங்களில் ரோந்து வந்து ஹிஜாப் அணியாத பெண்களை பிடிப்பார்கள்.

இளம்பெண் கொலை

கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த 22வயதான மாஷா அமினி என்ற பெண்ணை சிறப்புப் படை போலீஸார் வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனை அடுத்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டதில் ஈடுபட்டனர். 

கேரளாவில் ஆதரவு

ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கேரளாவில் முஸ்லிம் பெண்கள் திரண்டு ஹிஜாபை எரித்து முழக்கமிட்டனர். கோழிக்கோடு மாவட்டம் டவுன் ஹால் அருகே திரண்ட 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் மூலம் பெண்களை அடிமைப்படுத்த வேண்டாம். ஹிஜாபிலிருந்து விடுதலை வேண்டும் என்று கோஷமிட்டனர். 

Input From: Hindu

Similar News