கர்நாடகாவில் முதல்முறையாக மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் பாய்ந்த நடவடிக்கை - என்ன நடந்தது அங்கே?

Update: 2022-10-18 04:44 GMT

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான அஜய் குமார் என்பவர் பெங்களூரு யஷ்வந்த்பூரில் வசித்து வருகிறார். அவரது மகளை சையத் மோகின் என்ற 24வயது வாலிபர் கடத்தி சென்றதாக யஷ்வந்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து போலீஸார் சையத் மோகினை தேடி வந்தனர். கடந்த அக்டோபர் 13 ம் தேதி போலீஸ் ஸ்டேஷன் வந்த சையத் மோகின், எனக்கும் அஜய்குமாரின் மகளுக்கும் ஆந்திராவில் திருமணம் ஆகிவிட்டது என்றார்.

அஜய்குமார் மகளை, சையத் மோகின் மதமாற்றம் செய்துவிட்டதாக கூறினர். இதன்பேரில் போலீஸார் சையத் மோகினிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கொண்டுவரப்பட்ட‌ மதமாற்ற தடை சட்டத்தின் விதிமுறைகளை மீறியது தெரியவந்தது.

இதனால் மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சட்டத்தின் கீழ் முதல் நபராக சையத் மோகின் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Input From: Indian Express 

Similar News