இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி ஈடுபடக் காரணமாக இருந்த நிகழ்வுகள்.!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி ஈடுபடக் காரணமாக இருந்த நிகழ்வுகள்.!

Update: 2020-10-01 11:49 GMT

மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 நாள் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர் கரம்சந்த் காந்தி, புத்திலிபாய் ஆவார். காந்தியின் தாய் மொழி குஜராத்தி ஆகும்.

மகாத்மா காந்தி இங்கிலாந்தில் வழக்கறிஞர்க்கான படிப்பை படித்துள்ளார். பின்னர் எப்படி காந்தி இந்திய சுதந்திரம் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்படி ஈடுபட காரணம் என்ன?

மும்பை மற்றும் ராஜ் கோட்டில் சிறிது காலம் பணியாற்றிய மகாத்மா காந்தி, 1893 ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அரசியலில் ஈடுபடாத காந்திக்கு அந்த பயணம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு 'மாபெரும் அரசியல் சக்தியாகவும்' மாற்றியது.

குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வரக்கூடாது என்று புறக்கணிக்கப்பட்ட அந்த நிகழ்வும், வெளிநாட்டிற்கு பயணம் செய்யப்போவது ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்ததற்காக காந்தியடிகளை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்ட அந்த நிகழ்வும், தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்கள் தங்கள் நாட்டு முறைப்படி திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் இல்லை எனில் திருமணம் ரத்து செய்யப்படும் என்று அடிமைப்படுத்திய அந்த ஒரு நிகழ்வும் காந்தியின் மனதில் ஆழமாக பதிந்தது.

அதற்குப் பின்னர் 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி அதற்கு பொறுப்பாளராகவும் காந்தி அடிகள் இருந்தார். 1906 ஆம் ஆண்டு ஜோ பர்ன்ஸ் பார்க் என்ற இடத்தில் அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பலமுறை சிறையும் சென்றுள்ளார்.

இப்படி பலமுறை சிறை சென்ற பின்னரே, தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட 'மகாத்மா காந்தி' இந்தியா திரும்பியதும் தன்னுடைய நாட்டு மக்களுக்காகவும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் கோபால கிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களுடன் நட்புக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார்.

Similar News