#KathirExclusive : மதுரை மாநகரின் தனிச்சிறப்பைக் கூறும் சங்க இலக்கியம் - சுவாரசிய தகவல்கள்.!
#KathirExclusive : மதுரை மாநகரின் தனிச்சிறப்பைக் கூறும் சங்க இலக்கியம் - சுவாரசிய தகவல்கள்.!
மதுரை என்றாலே நமக்கு மீனாட்சி அம்மன் , மதுரை மல்லி, கள்ளழகர், ஜிகர்தண்டா என்று பல்வேறு விஷயங்கள் ஞாகபத்துக்கு வரும். ஆனால் சங்க இலக்கியம் கூறும் மதுரை மாநகரின் தனிச்சிறப்பு என்ன தெரியுமா ?
வாருங்கள் தெரிந்துக் கொள்வோம் !
பரிபாடல்
அகப்பொருளைப் பாடக்கூடிய சிறந்த சங்க இலக்கியம் பரிபாடல்.
"ஓங்கு பரிபாடல்" என்று இந்த நூல் சிறப்பாக கூறப்பட்டது.
பரிபாடல் திரட்டின் ஏழாம் பாடல் மதுரை நகரின் சிறப்பை பேசுகிறது.
அந்த வரிகள் வருமாறு*
"நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே"
சாதாரணமாக, மக்கள் கோழி கூவுதலால் தூக்கத்திலிருந்து எழுவார்கள். இது எங்கும் காணப்படும் நிலை. ஆனால் மதுரை மாநகரில் வேறு விதமான நிலை காணப்பட்டது என்று இந்த ஏழாம் பாடல் தெரிவிக்கிறது.
அந்த நகரில் வைகறைப் பொழுதில் அந்தணர்கள் நான்கு வேதங்களையும் ஓதுவார்கள். அவரகள் அவ்வாறு ஓதுவது, சிறந்த இசையை எழுப்பும். அந்த வேத ஒலி இசையைக் கேட்டுத்தான் மதுரை மக்கள் தினசரி காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுவார்கள்.
இந்தப்பாடல் வேறு ஒரு செய்தியையும் தெரிவிக்கிறது. சேர மன்னனின் தலைநகரான வஞ்சி நகரத்திலும், சோழர்களின் தலைநகரான உறையூரிலும் மக்கள் கோழி கூவத் துயில் எழுவார்கள். ஆனால் மதுரை மக்கள் மட்டிலும் வேத ஒலியைக் கேட்டு தினசரி துயிலெழுவார்கள்.
அன்பான தமிழர்களே !
சங்க காலங்களில் வேதங்கள் எந்த அளவுக்கு போற்றப் பட்டிருந்தால் இப்படி ஒரு பாடல் பரிபாடலில் இடம் பெரும் !
அதே போல வேதங்கள் எந்த அளவிற்கு மக்களின் வாழ்வியலுடன் கலந்திருந்தால் மக்கள் வேத ஒலியைக் கேட்டு துயில் எழுந்திருப்பார்கள் !