வாஷிங்டனில் நடைபெற இருக்கும் தமிழ் சித்திரை திருவிழா கொண்டாட்டம்!

Update: 2021-04-24 12:21 GMT

வாஷிங்டனில் வசிக்கும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு இணங்க சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. என்ன இருந்தாலும் உள்நாட்டில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி அழகுதான். ஆனால் தன்னுடைய நாட்டைவிட்டு வேலைக்காக வெளிநாட்டில் தங்கியிருக்கும் தமிழ் குடும்பங்களும் மற்றும் தமிழ் வட்டார மக்களும் ஒன்று சேர்ந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.


 வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரைத் திருவிழா 2021 வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கிழக்கு பிராந்திர நேரப்படி காலை 10 மணிக்கு இணையம் வழியாக நடைபெற இருக்கிறது. கலை நிகழ்ச்சிகள், அலங்கார முளைப்பாரி அணிவகுப்பு, பறை இசை, தமிழ் அறிஞர்களின் கலந்துரையாடல் என்று பல அருமையான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கலைஞர்கள் அசார் மற்றும் டி.எஸ்.கே.யின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


 தமிழறிஞர் அ.கா.பெருமாள் சிறப்புரையாற்ற உள்ளார். மக்களிசை நிகழ்ச்சியில் செந்தில் ராஜலட்சுமியின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் வீட்டிலேயே அடைப்பட்டு இருக்கும் நம் வாஷிங்டன் வட்டாரத் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவருடன் அமர்ந்து வீட்டிலிருந்தபடியே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். இந்த நிகழ்ச்சி முழுவதும் தமிழ்ச் சங்கத்தின் முகநூல் மற்றும்  யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட உள்ளது.

Similar News