தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக இணையவழி மூலம் நடைபெற்ற திருக்குறள் போட்டி!

Update: 2021-04-25 12:03 GMT

தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் கிளை ஏப்ரல் மாதத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை மிகவும் சிறப்பாக நடத்தியது. உலகில் பல மனிதர்களின் வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, இந்த ஆண்டு கணினி செயலியின் வாயிலாக நேரலையில் திருக்குறள் போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டியில் 4 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கு பெற்றவர்களின் வயதிற்கேற்ப, போட்டி நடத்தப்பட்டது.


 போட்டியாளர்களுக்கு, ஒப்புவித்த திருக்குறளுக்கு தமிழில் பொருள் சொன்னால், கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இது போன்று, போட்டியாளர்களுக்கு, குறள் எண், அதிகாரம் பெயர் சொல்லி, தமிழ் பொருளுடன் வரிசைப்படுத்தி ஒப்புவித்தால், கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் குறுகிய நேரத்தில் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கடினமாக உழைத்து ஆயிரத்து அறுநூற்றி ஐம்பத்தி ஒன்று திருக்குறள்களை கூறினார்கள்.


நடுவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களின் பாராட்டினார்கள். கடந்த சில ஆண்டுகளாக, மாணவர்களை ஊக்குவிக்க, குறளொன்றுக்கு ஒரு டாலர் என்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹுஸ்டன் நிறுவனம் பரிசு அளித்து வந்தது. திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனம் மே மாதம் இரண்டாம் தேதியன்று நடக்கவிருக்கும் அன்னையர் தின நிகழ்ச்சியில் கெளரவித்து பரிசளிக்க இருக்கிறது. 

Similar News