அமெரிக்க அதிபரிடம் இந்தியாவுக்கு ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளை அனுப்பி உதவ வேண்டுகோள் விடுத்த இந்திய வம்சாவளி!

Update: 2021-04-26 12:02 GMT

கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வீரியமாக உள்ள காரணத்தினால் இந்தியாவில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆக்சிஜன் சப்ளை மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் உபகரணங்கள் போன்ற அனைத்து பொருட்களும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை இந்தியாவுக்கு அனுப்பி உதவ வேண்டும் என இந்திய வம்சாவளியை சேர்ந்த MPயான ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும், ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு நாளில் சுமார் மூன்றரை லட்சம் பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை இந்தியாவுக்கு அனுப்பி உதவ வேண்டும் என இந்திய வம்சாவளி MPயான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவர் அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.


அமெரிக்காவில் சுமார் 4 கோடி டோஸ்கள் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பு மருந்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள MP ராஜா கிருஷ்ணமூர்த்தி, தற்போது அவை யாருக்கும் பயன்படாமல் உள்ளதாகவும், அந்த தடுப்பூசிகளை இந்தியா, அர்ஜென்டினா நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா பரவல் மீண்டும் வராமல் கட்டுப்பத்த பொது சுகாதாரத்தையும் அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் காக்க, இருப்பு உள்ள ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்க வேண்டும் என ஜோ பைடனுக்கு ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News