வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு ஏற்ற வகையில், உழைப்பாளர் தின சிறப்பு பட்டிமன்றம்!

Update: 2021-04-28 12:26 GMT

மே 1 உழைப்பாளர் தினம் இந்த தினம் இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் முளைக்கும் இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது எனவே உழைக்கும் வம்சத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு புது உற்சாகத்தை தரும் விதமாக பன்னாட்டு சிறப்பு பட்டிமன்றம் ஒன்றை இணையதளம் வாயிலாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சி முகநூலிலும் நேரடியாக ஒளிபரப்பாகும். பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். தில்லி கலை இலக்கிய பேரவை மற்றும் செந்தமிழ் சொல்வேந்தர் மன்றம் பஹ்ரைன் மற்றும் பல அமைப்புகள் இணைந்து நடந்திடும் இந்த நிகழ்வினில் உலகத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் இருந்தும் எட்டு நாடுகளில் இருந்து ஒன்பது பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.


டோக்கியோ தமிழ் சங்கம், கானா தமிழ் சங்கம் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெறும் நிகழ்வின் பட்டிமன்ற தலைப்பு, வாழ்வை வழிநடத்துவது - விதியா? மதியா? நிதியா? என்ற தலைப்பிலும். இதில் பட்டிமன்ற நடுவர் தொலைகாட்சி புகழ் புலவர். மா. ராமலிங்கம். மேலும் சிறப்பு விருந்தினர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா, இயக்குனர் ரமேஷ் கண்ணா. கௌரவ விருந்தினர்களாக இளங்கோவன் கருமாறன், தலைவர் கானா தமிழ் சங்கம் என பல பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் பணிச்செம்மல் தில்லி குமார், மகேஷ். வரவேற்புரை பொன் சங்கர பாண்டியன், உபன்யாசம் கோவை ஆழ்வார் ஸ்ரீநிதி, நெறியாள்கை மைதிலி கிருஷ்ணன், தலைமை பாரதி சுகுமாரன். மே 1 ம் தேதி சனிக்கிழமை இந்திய நேரம் மாலை ஐந்து மணிக்கு ஜூம் செயலி வழியாக பட்டிமன்றம் நடைபெற உள்ளது. அனைவருக்கும் அனுமதி முற்றிலும் இலவசம். ஆகவே வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு உழைப்பாளி தினத்தை கொண்டாட இது ஒரு அருமையான வழி.

Similar News