ஹூஸ்டன் கிளையின் சார்பாக நடைபெற்ற குழந்தைகள் தின சிறப்பு விழா.!

Update: 2021-04-29 12:54 GMT

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளை சார்பாக இணையம் வழியாக விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கு கொள்ள பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சுமார் நான்கு மணி நேரம் தங்கு தடை இன்றி ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த கிளையின் சார்பாக, வர்ண ஜாலம் சிறார்கள் வண்ணம் தீட்டும் போட்டி, ஆடல் அரங்கம் நடனப்போட்டி, இசையருவி பாட்டு போட்டி, மற்றும் பெரியவர்களுக்கு கோலப்போட்டியும், கருத்தரங்கமும் நடத்தப்பட்டன.


 வயது வாரியாக நடத்தப்பட்ட போட்டிகளில் பல்வேறு குழந்தைகள் வெற்றிபெற்றன மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சூப்பர் சிங்கரில் வாயிலாக புகழ்பெற்ற மூக்குத்தி முருகன் அவர்கள் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஹூஸ்டன் கிளையின் தலைவி திருமதி. மாலா கோபால் அனைவரையும் வரவேற்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் துவக்கம் மற்றும் குறிக்கோள்களை விவரித்தார்.


 இவரை தொடர்ந்து செயலாளர் டாக்டர் நளினி பாலச்சந்திரன் ஹூஸ்டன் கிளையின் தனித்துவம், சிறப்பு அம்சங்கள், ஆகியவற்றை விளக்கினார். இந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியை ஒரு நிதி திரட்டும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜூம் செயலியின் மூலமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணையம் வழியாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் 2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ற கருத்தரங்கம் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் விதமாக அமைந்தது.

Similar News