வெளிநாட்டில் வாழும் இந்தியர்களாக இருந்தாலும் மேலும் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றவர்கள் ஆக இருந்தாலும் அவர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் என்றுமே குறையாது. தங்களுடைய குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதிலும் அவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்று சொல்லலாம். அத்தகையவர்களுக்காக தற்போது 'தமிழ்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் வியக்கம் வைக்கும் தமிழ் என்ற தலைப்பில் மே 22 ம் தேதியன்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
சிகாகோவில் வசிக்கும் தமிழர்களுக்காகவும் மற்றும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 30 அதாவது இன்றுடன் முன்பதிவு நிறைவடைகிறது. எனவே மன்றம் வெளியிட்டுள்ள வெப்சைட்டின் மூலம் நீங்கள் சென்று நீங்கள் உங்கள் பதிவுகளை செய்து கொள்ளலாம். இதில் சங்க இலக்கியங்களில் வியக்க வைக்கும் வாழ்வியல் அறங்கள் என்ற தலைப்பில் முனைவர் பர்வீன் சுல்தானா பேச உள்ளார்.
இதைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஏப்ரல் 30 ம் தேதிக்குள் ctsvvt@chicagotamilsangam.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். இந்த நிகழ்ச்சி வருகிற மே 22 ம் தேதி காலை 10 மணி மதல் 11.30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் முக்கிய நோக்கம் ஒருவர் வாழ்க்கையில் எவ்வாறு அறங்களை செயல்படுத்த முடியும் மற்றும் அவற்றை பாதுகாக்க அவர் எவ்வாறு போராட வேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாக விவாதிக்க உள்ளனர்.