இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் வரவேண்டாம்: மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
இந்தியாவில் கொரோனா தோற்று நோயின் இரண்டாம் அலை பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பும் சொந்த நாட்டவர்களுக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு தற்பொழுது எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் இருந்து தங்களுடைய சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்ப என்னும் எண்ணத்தை தற்போது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு கேட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கு அதிகமாக இருந்து வரும் நிலையில், கொரோனாவால் மரணம் அடைந்துள்ளவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரம் என்ற அளவை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. கொரோனா பீதி காரணமாக, பல்வேறு நாடுகள், இந்தியாவில் இருந்து தங்களுடைய சொந்த நாட்டிற்கும் மேலும் தங்கள் நாட்டு மக்களையும் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வது தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
சில நாடுகள் தற்பொழுது தடை விதித்து வருகின்றது. இந்நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கான நேரடி விமான சேவையை துண்டிப்பதாக அறிவித்துக் கொண்டது. இந்த தடையினால் ஆத்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர்கள் வேறு வழியாக பயணத்தை மேற்கொண்டு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்வதாக அந்நாட்டு அரசு செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த அரசு ஒரு கடுமையான எச்சரிக்கை நடவடிக்கையும் தற்போது அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து திரும்பி வரும் ஆஸ்திரேலிய நபர்கள் மூலம் மீண்டும் கொரோனா உச்சம் எடுக்கக்கூடும் என்று முடிவு செய்த இத்தகைய அறிவிப்பு வெளியீடு செய்ததாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. எனவே போடப்பட்டுள்ள தடைகளை மீறி இந்தியாவில் இருந்து வரும் ஆஸ்திரேலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் செய்தது பெரும் குற்றமாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படி மீறுபவர்களுக்கு 66 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.