துபாயில் வெளியிடப்பட்டுள்ள விடியலைத் தேடி வெள்ளைப்புறா என்ற தமிழ் சிறுகதை நூல்!

Update: 2021-05-04 11:36 GMT

தற்பொழுது இருந்து கொண்டு இருக்கும் கடுமையான நோய் தொற்று காலத்தில் பல பேர் தங்களுடைய புதுப்புது திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். மேலும் பலர் அதற்கான முயற்சிகளையும் எடுத்துக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துபாயை சேர்ந்த சத்வா பகுதியில் உள்ள ஜிஞ்சர் டீ உணவகத்தில் தமிழ் சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகம் செய்யப்பட்டது. சிறுகதை என்றால் அனைவரும் விரும்பிப் படிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இது அன்று முதல் இன்று வரை மக்கள் மனதில் சிறுகதையில் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றது. 


சென்னையைச் சேர்ந்த சமூக சேவகி ஜரினா ஜமால்அவர்கள் எழுதிய 'விடியலைத் தேடிய வெள்ளைப் புறா' என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. திருச்சி பைஜூர் ரஹ்மான், சமூக சேவகர் கவுசர் பெய்க், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், முஹ்சின் உள்ளிட்ட குழுவினர் இந்த நூல் அறிமுத்தில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து சுவைமிக்க அவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு இறுதியில் நூல் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.


இந்த விவாதத்தில் விடியலைத்தேடி வெள்ளைப்புறா என்பது ஒரு எதார்த்தமான ஒரு சிறுகதையாக இருக்கும் என்றும் படிப்பவர்களுக்கு ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நூல் வெளியீட்டாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். எனவே இந்த சிறுகதையை படிப்பதும் இதன் தாக்கம் சற்றே அதிகமாகத்தான் இருக்கிறது.

மாற்றம் என்பது இதில் இடம்பெற்றுள்ள ஒரு விஷயம். அதாவது காலத்திற்கு ஏற்றவாறு நாம் மாறிக் கொண்டேதான் இருக்க வேண்டும். எனவே ஒவ்வொரு விடியலும் நம்மை ஒரு மாற்றத்திற்காக தான் இழுத்துக் கொண்டு செல்கின்றது என்பதை நாம் மறக்கக்கூடாது. 

Similar News