இந்திய குழந்தைகளுக்காக அமெரிக்காவில் நடத்தப்பட்ட அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி!

Update: 2021-05-05 12:06 GMT

அமெரிக்காவில் குறைந்த அளவு வருமானம் ஈட்டுகின்ற இந்தியர்களின் குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு கல்வி புகட்டும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஹூஸ்டன் மாநகரக் கிளை ஆண்டுதோறும் அன்னையர் தின விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றது.

அதைப்போல இந்த ஆண்டும், அதன் தொடர்ச்சியாக, ஹூஸ்டன் கிளைத் தலைவர். திருமதி. மாலா கோபால் மிக விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருந்தார். அவரின் தலைமையில் மே மாதம் ஹூஸ்டன் வளாகத்தில் 'அன்னையர் தின ஆரவாரம்' என்ற பெயரில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் விழாவாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 


மேலும் பல்வேறு வகையான குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கதை மற்றும் கவிதைப் போட்டிகளுக்கு நடுவராக, திருச்செங்கோடு விவேகானந்தர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். கவிதா ராஜசேகர் கலந்து கொண்டு கதை மற்றும் கவிதைகளை ஆய்ந்து வரிசைப்படுத்தி பரிசுகளை அறிவித்தார்.

இந்த போட்டிகளில் பலர் உற்சாகமாய் கலந்து கொண்டு, பரிசுகள் பெற்றனர். நடுவராக கலந்து கொண்ட முனைவர். கவிதா ராஜசேகர் படைப்புகளின் சிறந்த வரிகளையும் சிறப்பு அம்சங்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். 


நம் குழந்தைகள் நகைச்சுவையோடு விவாதித்து அதே நேரம் தம் பெற்றோரின் பங்களிப்பையும் உணர்ந்து மனப்பக்குவத்தோடு பேசுவதை கேட்கும் போது மிகவும் அன்பாக அமைந்தது.

பெற்றோர் பலரும் தங்களுடைய குழந்தைகளை உற்சாகமாக வரவேற்றனர். குழந்தைகளுக்கும் அன்னைக்கும் இடையில் இருக்கின்ற உறவுகளை எந்த ஒரு பிரச்சனையாலும் பிரிக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் நிரூபித்தனர்.

Similar News