சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் மொழி நிறைவு விழா!

Update: 2021-05-06 11:44 GMT

சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாய்மொழியான தமிழிலேயே அதிகமாக கலந்துரையாடுகிறார். அங்கு வளரும் தங்களுடைய குழந்தைகளையும் தமிழ் பயிற்றுவிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். எனவே அத்தகையவர்களுக்காக சிங்கப்பூர் வளர் தமிழ் மொழி இயக்கம் நடத்திய தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம் என்ற முழக்கத்துடன் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முக்கியமான நோக்கம் குழந்தைகளுக்கிடையே தமிழை ஊக்குவிப்பது ஆகும். எனவே இந்த நிகழ்ச்சியை தற்போது நிறைவேறியுள்ளது. சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த நிகழ்ச்சி தற்பொழுது நிறைவு விழாவை கொண்டாடி உள்ளது.


சிங்கப்பூரின் பிரதான தமிழ் அமைப்புக்கள் அவரவர் சார்பில் விழா எடுத்து மகிழ்வித்தன. வழக்கம் போல கவிமாலை அமைப்பு மே 5 ஆம் தேதி நிறைவு விழாவினை இணையதளம் வழியாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினர் கே.கார்த்திகேயன் கலந்து கொண்டு பரிசுகளையும் விருதுகளையும் வழங்கி கவுரவித்தார்.

வளர் தமிழ் இயக்கத் தலைவர் மனோகரன் நிறைவுரை ஆற்றினார். அவர்தம் உரையில் மாணவர்களின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டி இவை போன்ற செயல்கள் பெரும்பாலான பெற்றோர்கள் ஈடுபடுவதன் மூலமாக வளர் தமிழ் இயக்கமே தமிழ்மொழி விழாவை நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றார். 


முன்னதாக அமைப்பின் தலைவர் கவிஞர் இன்பா தலைமை உரையாற்றுகையில், இளைய சமுதாயத்திடை குறிப்பாக மாணவரிடை தமிழைக் கொண்டு சேர்த்ததில் கவிமாலை அமைப்பின் பங்கினை எடுத்துரைத்தார். துணைச் செயலாளர் இராஜீ மாற்றி அமைக்கப்படும் மாணவர் திட்டம் பற்றி அறிவித்தார். எனவே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி தன்னுடைய நிறைவு விழாவை இனிதே முடித்துக் கொண்டது.

Similar News