துபாயில் உள்ள தமிழ் அமைப்பின் சார்பாக பல்வேறு ஏழை மக்களுக்கும் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதமாக நோன்பு பொருட்களும் மற்றும் கஞ்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழ் அமைப்பு மிகவும் சிறப்பான முறையில் எந்த ஒரு தடையுமின்றி மற்றும் பேத பட்சமின்றி பொருட்களை வழங்கி வருகிறது.
இதனால் துபாய் வேலை பார்க்கும் அதிகமான இந்தியர்கள் பயனடைந்துள்ளனர் என்று சொல்லலாம். எனவே இத்தகைய செயலை பாராட்டிய இந்திய துணை தூதரகம் தமிழ் அமைப்பிற்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் அரசு அனுமதியோடு நான்கு இடங்களில் நோன்புக் கஞ்சியுடன் கூடிய இப்தார் விநியோகம் செய்யும் பணி தினந்தோறும் ரமலான் மாதம் தொடங்கியது முதல் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு இடமான துபாய் தேரா அஸ்கான் ஹவுஸ் பகுதியில் வினியோகம் நடைபெற்று வரும் நிலையில், துபாய் இந்திய துணை தூதர் அமன் பூரி நிகழ்விடத்துக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்ததுடன் மட்டுமில்லாமல், இந்த அமைப்பு செய்யும் செயல்களையும் மனதார பாராட்டினார்.
அங்கு இப்தார் வினியோகம் நடைபெறுவதை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஈமானின் சமூக நல பணி பாராட்டுக்குரியது ரமலான் மாதம் இப்தார் வழங்கும் பணி சிறப்புக்குரியது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஈமான் தலைவர் ஹபிபுல்லா கான் தலைமையில் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் நடைபெற்றது. தொழிலதிபர்கள் கமால், பிளாக் துலிப் யஹ்யா, ஜெய்லான் பாஷா, புஹாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.