இந்தியாவிற்கு உதவியாக ஆக்சிஜனை அனுப்பி வைத்த கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகத்தினர்!
இந்தியாவின் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆட்கொள்ளப்பட்டது. குறிப்பாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சப்ளைகளும் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவைகள் சற்று அதிகமாகவே இருந்தது.
இவற்றைக் கருத்திற்கொண்டு இந்தியா உடனான நட்பு நாடுகள் இந்தியாவிற்கு உதவி செய்ய வேண்டும் மற்றும் கொரோனாவிலிருந்து மீளவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தங்களால் முடிந்த உதவிகளை நட்பு நாடுக்கு செய்தது. நோய்த்தொற்றுக்கு ஆரம்ப காலத்தில் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பி வந்தது. அதன் பிரதிபலனாக தற்போது இந்தியாவிற்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. அந்த வகையில் தற்போது கத்தார் நாட்டில் வசித்து வரும் இந்திய சமூகத்தினர் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க ஒரு சிறிய உதவியை தன்னுடைய நாட்டின் சார்பாக செய்துள்ளனர்.
அந்த வகையில் 232 சிலிண்டர்கள் கொண்ட ஆக்சிஜன் கத்தாரில் வசிக்கும் இந்திய மக்களின் சார்பாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சிலிண்டர்கள் அனைத்தும் INS தர்காஸ் என்ற கடற்படை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி அவர்கள் கூறுகையில், "இந்திய தற்போது கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. அவற்றை எங்களால் முடிந்த அளவிற்கு ஒரு சிறிய உதவிகளை நாங்கள் செய்துள்ளோம்" என்று அவர்கள் கூறினார்கள்.