நியூஜெர்சியில் நிதி திரட்டி, தமிழகம் கொரோனாவை எதிர்கொள்வதற்கு வழங்கிய பவுன்டேஷன்!

Update: 2021-05-13 13:24 GMT

கொரோனாவின் இந்தியா மிகவும் பற்றாக்குறை சந்தித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக மருந்துப் பொருட்களிலும் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சப்ளைகளிலும் அதிகளவு பற்றாக்குறையும் எதிர்கொண்டு வருகிறது. எனவே இவற்றுள் தமிழகமும் என பல்வேறு பற்றாக்குறைகளை எதிர்கொண்டு தான் வருகிறதா இவற்றை தவிர்ப்பதற்காக தமிழக மக்கள் சார்பில் தமிழ்நாடு பவுன்டேஷனுக்கு நிதி திரட்டும் பொருட்டு, மே மாதம் நியூஜெர்சி வடக்கு ப்ரன்ஸ்விக் அஞ்சப்பர் உணகத்தின் சார்பில் 100 சதவீதம் நிதி திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


தமிழ்நாடு பவுன்டேஷன் என்பது அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக 1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட முற்றிலும் சேவை அமைப்பாகும். இவர்கள் நிதி திரட்டும் பொருட்டு, ஒரு நாள் விற்பனை மூலம் பெற்றப்படும் தொகை அனைத்தும் நிதியாக வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதன் செய்தி பரவியதும் மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்ததுடன், உணவகத்திற்கு நேரில் வந்தும் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். 


முதல் இரண்டு மணி நேரத்திலேயே அனைத்து பிரியாணி பார்சல்களும் விற்கு தீர்ந்தன. உணவக சமையல் கலைஞர்களும் வழக்கமாக தயாரிப்பதை விட 3 மடங்கு அதிக பிரியாணிகளை தயாரித்தனர். இறுதியாக அஞ்சப்பர் உணவகம் மூலம் 6100 டாலர்கள் நிதி திரட்டப்பட்டு, நன்கொடையாக வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் இந்த நிதி திரட்டும் பணியில் ஒன்றிணைந்து 20 லட்சம் டாலர்களை திரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தொகை முழுவதும் ஆக்சிஜன் கொள்கலன்கள் உள்ளிட்ட தமிழக மக்களுக்கு தேவையான மற்ற மருத்துவ உபகரணங்களுக்கும் வாங்க பயன்படுத்தப்பட உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்தனர்

Similar News