வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு நல வாரியம்: இந்தியன் சோசியல் ஃபோரம் அமைப்பு!
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல நபர்கள் தங்களுடைய திறமை காரணமாக அல்லது வேலைக்காக வெளிநாடுகளில் சென்று பல்வேறு விதமான வேலைகளையும் செய்து வருகிறார்கள். ஆகவே வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்து ஒரு தனி அமைச்சகம் ஏற்படுத்துமாறு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் சார்பாக இந்தியன் சோஷியல் ஃபோரம் நீண்டகாலமாக ஒரு கோரிக்கை ஒன்றை முன்வைத்து வந்துள்ளது. குறிப்பாக இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் வருமானங்களை இந்தியாவிற்கு ஈட்டித் தரும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் முக்கியத்துவம் பெறும் வகையில் இந்த கோரிக்கையை அமைந்துள்ளது.
அந்தக் கருத்தை தற்பொழுது முன்வைத்து வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நீண்ட காலமாக கேட்கப்பட்டு வரும் ஒரு கோரிக்கை. இதனை வலியுறுத்தி ட்விட்டர் மற்றும் முகநூல் வாயிலாக கடந்த காலங்களில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தற்பொழுது அந்த கோரிக்கையும் ஏற்பட்டுள்ளது.
தற்போது பதவி ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரியம் அமைத்து செஞ்சிமஸ்தான் அவர்களை இத்துறைக்கான அமைச்சராகவும் நியமித்திருக்கிறார். இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நீண்ட கால கோரிக்கை தற்சமயம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வாழ்வில் அக்கறைகொண்டு இந்த செயலை செய்ததற்காக தமிழக அரசாங்கத்திற்கு, இந்தியன் சோசியல் ஃபோரத்தின் சார்பில் மனதார நன்றி தெரிவித்து கொள்ளப்பட்டது.