அபுதாபி தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடத்திய வெளிநாட்டு வாழ் தமிழர் துறை அமைச்சர்.!
அபுதாபி அய்மான் சங்கம் ஏற்பாட்டில் அமீரக தமிழ் அமைப்புகளுடன் வெளிநாட்டு வாழ் தமிழர் நல துறை அமைச்சர் செஞ்சி K. S. மஸ்தானுடன் மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க தலைவர் கீழக்கரை H.M.முஹம்மது ஜமாலுதீன் தலைமையேற்று வரவேற்புரை ஆற்றியுள்ளார். சங்க தலைவர் மற்றும் அய்மான் தலைமை கெளரவ ஆலோசகர் டாக்டர். காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி அறிமுக உரை நிகழ்த்தினார். வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனுக்காக மற்றும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அய்மான் சங்கத்தின் சார்பாக கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை சாகுல் ஹமீது ஹாஜியார் மற்றும் அய்மான் பைத்துல்மால் பொதுச்செயலாளர் மைதீன் முன்வைத்துள்ளார். அய்மான் சங்கத்தின் சார்பில் தமிழக பள்ளி, கல்லூரிகளில் வெளிநாடு வாழ் தமிழ் மாணக்கர் சேர்க்கைக்கு முன்னுரிமை வழங்கு வேண்டும் என்றும், பணி முடித்து அல்லது வேலை இழந்து தாயகம் திரும்புவர்களுக்கு கடன் உதவி அளித்தி வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கான கோரிக்கைகளுக்கு திட்டவரைவு அமைப்பது தொடர்பாக இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டில் இறந்து போனவர்களின் உடலை அரசு செலவில் தாயகம் அனுப்புவது மற்றும் வெளிநாடுகளில் பணியின்போது மரணமடையும் விளிம்புநிலை தமிழகம் சார்ந்த தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து திக்கின்றி தவிக்கும் அந்த குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமீரகத்தில் இயங்கிக் கொண்டிருக்க கூடிய சகோதர அமைப்புகளின் நிர்வாகிகளான துபாய் தமிழ்ச் சங்கத்தின் தலைவி சமூக சேவகி டாக்டர் ஜெயந்தி மாலா சுரேஷ் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன் வைத்தனர்.