சிங்கப்பூரில் நடந்த இந்தியாவின் பாரம்பரிய புத்தாண்டு ஓவியக் கண்காட்சி.!

Update: 2021-05-24 02:15 GMT

இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகங்கள் அவரவர் மொழிகளில் பாரம்பரியப் புத்தாண்டை வெகு விமர்சியாக கொண்டாடுகிறார்கள். குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டிற்கு ஆக பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டு கொண்டாடப் படுகின்றது. கேரளாவில் விஷு என்றும், அசாமில் பிஹு என்றும், பஞ்சாபில் பைஷாக்கி, மேற்கு வங்காளத்தில் போஹேலாபோய்சாக் என்றும் கொண்டாடுகிறார்கள். இந்தப் பாரம்பரியப் புத்தாண்டை சிங்கப்பூரிலும் கொண்டாட நம் இந்திய மரபுடைமை நிலையமும் NBS சர்வதேசப் பள்ளியும் இணைந்து, புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற தலைப்பில் நான்கு மாணவர்கள் வரைந்த 6 ஓவியங்களை கண்காட்சிப்படுத்தி இருந்தார்கள்.


இந்த ஓவியக் கண்காட்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக இந்திய உயர் ஆணையத்தின் உயர்ச் செயலாளர் சாஸ்வதிதேய் அவர்கள் பார்வையிட வந்திருந்தார். அவர் எங்கள் ஓவியங்களை தனித்தனியாக விவரிக்கச் சொல்லி கேட்டு எங்களை பாராட்டி மேன்மேலும் நிறைய வரைய வேண்டும் என்று மாணவர்களிடம் கூறினார்கள். தமிழ்ப் புத்தாண்டை பற்றி ஒரு மாணவி வரைந்த ஓவியத்தில், தமிழ்ப் புத்தாண்டு என்பது உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் தங்கள் வீடுகளில் கோலம் போட்டு, விளக்கேற்றி, பொங்கல் வைத்து, முக்கனிகள் படைத்து கோவிலுக்குச் சென்று வழிபட்டு சிறப்பாக கொண்டாடுவார்கள். அதைக் குறிக்கும் விதமாக நான் எனது ஓவியத்தை வரைந்திருந்தேன். வீடுகளில் விளக்கேற்றினால் தீமை அகன்று நன்மை ஏற்பட்டு நமது வாழ்க்கை பிரகாசமடையும் என்பதைத் தெரிவிக்கும் படியாக வரைந்திருந்தேன்.


எனது ஓவியத்தைப் பார்த்த திருமதி.சாஸ்வதிதேய் ஓவியத்தின் அளவீடு மிகச்சரியாக இருப்பதாகவும் பேனா கொண்டு தீட்டப்பட்ட நிறம் நுணுக்கமாகவும் அழகாகவும் இருப்பதாகக் கூறினார். மேற்கு வங்காளத்தின் புத்தாண்டு தினமான போஹேலாபோய்ஷாக் கொண்டாட்டம் குறித்து மற்றொரு மாணவிடம் கேட்டபோது, இந்த ஓவியங்கள் வரையும் பொழுது நாங்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தோம். இதனால் நாங்கள் எங்களது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது என்று கூறினார்.

Similar News