சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்: பட்டியலை வெளியிட்ட இந்திய தூதரகம்.!
பல்வேறு உலக நாடுகளில் வேலைக்காக சென்று, தற்போது உள்ள தொற்று காரணமாக உள் நாட்டிற்கு திரும்பும்படி, மத்திய அரசின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் மிஷன் கடந்த ஆண்டு செயல்பட்டது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை நாடு திரும்ப உதவும் பாரத் மிஷன் மூலம், கடந்த ஆண்டு முதல் இதுவரை சுமார் மொத்தம் 87,055 இந்தியர்கள் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோயால் வேலை இழப்பு, குடும்ப நிர்ப்பந்தம் மற்றும் குடும்பத்தில் மரணம் ஆகியவை காரணமாக இந்தியர்கள் வீடு திரும்ப வேண்டிய சூழலில் அவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு வந்தே பாரத் மிஷனை செயல்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2020 ஆண்டு மே முதல் இந்த 2021 ஆம் ஆண்டு மே 18 வரை மொத்தமாக சுமார் 629 வந்தே பாரத் விமானங்கள் 87,055 பயணிகளை ஏற்றிச் சென்றன என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் மூன்று வெவ்வேறு அமைச்சகங்களின் தனி கூட்டு அறிக்கையில் வந்தே பாரத் மிஷன் விமானங்களின் ஒரு பகுதியாக சராசரியாக 180 இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்பிச் செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.
இந்த விமானங்களில் சராசரியாக சுமார் 180 பயணிகள் இந்தியாவுக்கு திரும்பி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 25 விமானங்கள் சிங்கப்பூருக்கு வருகை தருகின்றன என்று போக்குவரத்து, வெளியுறவு மற்றும் மனிதவள அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக கூறியுள்ளது.