ஹஜ் பயணத்திற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி : மத்திய ஹஜ் கமிட்டி விளக்கம்.!

Update: 2021-05-25 14:41 GMT

உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் அதிகமாகத்தான் இருந்து வருகிறது. இதனால் மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மக்களை பாதுகாக்கும் வருகிறது. இது மக்கள் தங்களுடைய மன அமைதிக்காக ஆலயங்கள், மசூதிகள், சர்ச்களுக்கும் போக முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இது குறிப்பாக முஸ்லிம்கள் தங்களுடைய ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் இருந்து வருகிறார்கள். ஆனால் ஜூலை மாதம் 60,000 ஹஜ் பயணிகளை அனுமதிக்க சவூதி அரேபிய அரசு தற்பொழுது முடிவு செய்துள்ளது. உள்நாட்டை சேர்ந்த 15,000 பேரையும் பிறநாடுகளை சேர்ந்த 45,000 பயணிகளையும் அனுமதிக்க சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கினாலும், தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனாவில் கடுமையான சூழ்நிலையின் காரணமாக பயணம் மேற்கொள்வது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். 


இந்நிலையில் இந்தியாவில் இருந்து 5,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக மத்திய ஹஜ் கமிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும் மாநில வாரியாக எவ்வளவு பயணிகள்? அனுமதிக்கப்படுவர் என்ற விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை. கடந்த 6 மாதங்களில் மருத்துவமனைகளில் எந்த நோய்க்காகவும் அனுமதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என ஹஜ் கமிட்டி பரிந்துரை தெரிவித்துள்ளது.


வழக்கமாக இந்தியாவில் உள்ள 1,000 இஸ்லாமியர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் அதன்படி 2019-ம் ஆண்டு 1.75 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு 18 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளோரை நிச்சயமாக பாதுகாப்பு கருதி அனுமதிக்க போவது இல்லை என்று ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.  

Tags:    

Similar News