இந்திய அமைப்புகள் மூலம், பஹ்ரைனில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைப்பு.!

Update: 2021-05-29 12:56 GMT

உலக நாடுகள் பலரும் தங்களுடைய இரண்டாம் அலையை எதிர்கொண்டு வருகின்றன. அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிப்பதற்கு முக்கிய தேவையாக இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தற்போது மிக அதிகமாக தான் தேவைப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் வருகிறது. உலக நாடுகள் இந்தியாவிற்கு தன்னுடைய நட்பை வெளிப்படுத்தும் விதமாக பல உதவிகளை செய்துள்ளது. 


வெளிநாட்டில் தற்பொழுது இருந்து வரும் இந்திய சொந்தங்கள் இந்தியாவிற்கு தன்னுடைய உதவிகளை ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில்தான் உள்ளது. இந்த நிலையில் தற்பொழுது, பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா பகுதியில் இருந்து பஹ்ரைன் மற்றும் இந்திய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நோயாளிகள் நல்ல முறையில் நூல்கள் மீண்டு வரவேண்டும் என்பதும் இவர்கள் விடைகள் ஒரே எண்ணமாக மற்றும் பிரார்த்தனையாகும். 


இந்த இந்திய அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்ட சிலிண்டர்கள் அனைத்தும் மும்பை துறைமுகத்துக்கு INS தர்காஸ் என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. இவை அனைத்தும் சிகிச்சைக்கு தேவையான இடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தொற்றுநோய் காலத்தில் மக்கள் அனைவரும் தங்களுடைய உடல் நலத்தில் மிகுந்த அக்கறையுடன் இருக்கவேண்டும் என்றும் மற்றும் பொது இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் இந்த அமைப்பினரால் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. 


Tags:    

Similar News