இந்திய மாணவர்களின் கல்வி நிலை - குவைத் பல்கலைக்கழக தலைவருடன் இந்திய தூதர் சந்திப்பு!
இந்திய நாட்டைச் சேர்ந்த பல்வேறு மாணவ மாணவிகள் தங்களுடைய விரிவான படிப்புகளுக்காக, வெளிநாடுகளில் தங்கி தங்களுடைய பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது உள்ள இந்த கொரோனா காலகட்டத்தில் வெளிநாடுகளில் தங்கி படிப்புகளை மேற்கொள்வது என்பது சற்று கடினமான விஷயம்தான். இதனால் இந்திய மாணவர்களின் கல்வி ஒரு கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அந்த வகையில் தற்போது அரபு நாடுகளில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்துடன் இந்திய தூதர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
குவைத் நாட்டில் அரபு திறந்த வெளி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் முகம்மது பின் இப்ராஹிம் அல் ஜகரியை, குவைத் நாட்டுக்கான இந்திய தூதர் சி.பி ஜார்ஜ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து அப்போது பேசப்பட்டது. குறிப்பாக அரபு திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்திய தூதர் இந்தியா மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இருந்து வரும் உறவுகள் தொடர்பான நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். பின்னர் பல்கலைக்கழக தலைவரும், இந்திய தூதருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். இருவருடைய சந்திப்பும் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அரபு நாடுகளில் இந்திய மாணவர்களின் கல்வி நிலை எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் பாதிக்கப்பட்டனர் என்பதுதான்.