துபாயில் உள்ள இந்திய சமூக நல அமைப்புகளுக்கு துபாய் இந்திய துணைத் தூதர் பாராட்டு.!

Update: 2021-06-04 12:44 GMT

துபாயில் உள்ள இந்திய சமூக நல அமைப்புகள் சார்பாக அங்கு உள்ள தமிழர்களுக்கும் இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவிற்கு அவர்கள் சார்பாக ஆக்சிஜன் சிலிண்டர்களையும் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே சமூக நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படும் சமூக அமைப்புகளில் ஒன்றாக இந்த அமைப்பு இருக்கிறது என்று துபாய் இந்திய துணை தூதர் பாராட்டியுள்ளார். 


துபாய் ஈமான் அமைப்பு, தமிழ் லேடிஸ் அசோசியேசன் உள்ளிட்ட அனைத்து இந்திய சமூக அமைப்புகளும் சமூக நலப்பணிகளில் சிறப்பாக செயல்படுகின்றன என இந்திய துணை தூதர் அமன் பூரி தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்தார். கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளால் நீண்ட இடைவெளிக்கு பிறகு துபாய் இந்திய துணை தூதரக வளாகத்தில் நடைபெற்ற இந்திய சமூகநல அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்திய துணை தூதர் அமன் பூரி தலைமை வகித்தார்.


துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், தமிழ் லேடீஸ் அசோசியேசன் சார்பில் மீனாகுமாரி மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இந்திய சமூகத்தின் நலன் குறித்து பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து சமூக நல அமைப்பினரின் சார்பாக கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Tags:    

Similar News