சிங்கப்பூர் மற்றும் தமிழக முனைவர்கள் இணையம் வழியாக இணையும் தமிழ் உலா நிகழ்ச்சி!

Update: 2021-06-06 12:17 GMT

வாழ்வியல் இலக்கியப் பொழில் என்ற தமிழ் அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி அளவில் ஜூம் செயலி வழியாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக 'கோடைத் தமிழ் உலா விழா' என்றும் அழைக்கப்படும். சங்க இலக்கியப் பாடல்களும் உரைகளும் அடங்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூரில் இருந்து, தமிழ் முனைவர்கள் ஐவகை நிலங்களின் இலக்கண மற்றும் இலக்கியச் சுவையை வழங்குகியவாறு, தமிழ்ச் சுவைஞர்களை அழைத்துச் செல்லும் தமிழ் உலா அமையும். அதாவது ஐந்து வகை திணைகளின் ஒவ்வொரு வகையான நிலங்களை பற்றியும் விரிவாக இலக்கிய சுவை மாறாமல் விவரிக்கப்பட்டுள்ளது. 


முதல் சுற்றில் முனைவர் ரகமத் பீபி, முனைவர் ரேவதி, முனைவர் நிர்மலா கிருஷ்ணமூர்த்தி, முனைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என உரை வழங்குவர். இரண்டாம் சுற்றின் முனைவர் கி.துர்கா தேவி, முனைவர் அமிர்தகடேஸ்வரர், முனைவர் இலக்கியத்தோழன் கலியமூர்த்தி, முனைவர் சத்தியபாமா முத்தமிழ்ச்செல்வன் மற்றும் முனைவர் மு.ஜோதிலட்சுமி ஆகியோரும் அதே வரிசையில் உரை வழங்குவர். 


சிங்கப்பூர் தேசியக் கல்விக்கழகத்தின், ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தமிழ் பிரிவின் துணைத்தலைவர் டாக்டர். சீதா லட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஜூம் வழி நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். மேலும் தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். 

Similar News