ஓமன் இந்திய பள்ளி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி இந்திய தூதர்!

Update: 2021-06-07 12:11 GMT

ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் போன்ற பல்வேறு இடங்களில், மேலும் வெவ்வேறு பகுதிகளிலும் இந்திய பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்துக்கு புதிய நிர்வாகக் குழு தேர்வுதற்பொழுது செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகக் குழு எதிர்காலத்தில் எந்த மாதிரியான நடவடிக்கைகளை இந்திய மாணவர்களுக்கு வழங்க உள்ளது என்பது குறித்து பல்வேறு கேள்விகளையும் மற்றும் தகவல்களையும் ஓமன் நாட்டிற்கான இந்திய தூதர் விசாரித்து கலந்துரையாடி உள்ளார். 


அந்த நிர்வாகக் குழுவினருடன் இந்திய தூதர் முனு மஹவர் காணொலி வழியாக கலந்துரையாடல் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்திய பள்ளிக்கூட நிர்வாகத்தின் சிறப்பான சேவையை பாராட்டினார். வருங்காலத்தின் நாட்டின் பல்வேறு பதவிகளுக்கு வர உள்ள இந்திய மாணவ மாணவியர்களின் கல்வி நிலை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது வைரஸ் தொற்றின் காரணமாக வகுப்புகள் முழுவதும் முழுவதும் இணையம் வழியாக நடைபெறும் என்பதையும் பள்ளி நிர்வாகம் முழுமையாக உறுதி செய்துள்ளது.


இந்திய மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்கும் வாய்ப்பினை இந்த பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இந்த பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக கொரோனா பாதிப்பின் போது சவால்களை சந்தித்து சிறப்பான சேவையை வழங்கியுள்ளது. இதற்காக அந்த நிர்வாகத்துக்கு இந்திய தூதர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார். 

Similar News