துபாயில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்ச்சி!

Update: 2021-06-09 12:16 GMT

உலகளவில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளின் முக்கியமான நோக்கமாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தற்போதும் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் மற்றும் அதனுடைய விலைமதிப்பில்லாத செல்வம் என்பது மக்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டார்கள். எனவே இதன் காரணமாக உலக அளவில் உள்ள மக்கள் தங்களை சுற்றியுள்ள சூழ்நிலையை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் நாள் உலக சுற்றுச் சூழல் தினமாக கடைபிடிக்கப் படுகிறது.


இந்த நாளில் வருடம் முழுவதும் சுற்றுச்சூழலை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள நபர்களுக்கு பல்வேறு சமூகநல அமைப்புகள் விருதுகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விழாக்களை வைத்தும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது துபாயில் அமீரக சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் தலைவர் ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் சுற்றுச் சூழலை நீங்கள் பாதுகாப்பதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முடியும் என்பதை ஆகும். 

Similar News