சவுதி அரேபியா கிரிக்கெட் பெடரேசன் தலைவருடன், இந்திய தூதர் சந்திப்பு.!

Update: 2021-06-10 12:42 GMT

இந்திய அரசாங்கத்தின் சார்பாக வெளிநாடுகளில் நல்லுறவை ஏற்படுத்தும் பொறுப்பை இந்திய தூதர்கள் பெற்றுள்ளார்கள். இவர்களுடைய முக்கியமான பணி என்னவென்றால், இந்திய அரசின் நல்லுறவு மற்றும் இந்தியா உடனான நட்பு மற்றும் நாடுகளில் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய நம்பிக்கையை பெற முடியும் என்பதாகும். எனவே இவர்கள் இந்தியாவின் சார்பாக பிரதிநிதிகளாக மற்ற நாடுகளில் உள்ளார்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவு பலப்படுத்தும் விதமாக இவர்களின் செயல்கள் இருந்து வருகிறது.


அந்த வகையில் தற்போது சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் அந்த நாட்டின் கிரிக்கெட் பெடரேசன் தலைவர் இளவரசர் சௌத் பின் மிஷால் அல் சௌத் உடன் இந்திய தூதர் டாக்டர் அவுசப் சயீத் சந்தித்து பேசினார். அப்போது கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, சவுதி அரேபியாவில் இந்திய விளையாட்டை பிரபலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.


குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக இரு நாடுகளில் பிரபலமான விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதன் மூலமாக இந்த உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்று நோக்கத்திற்காக இந்த உரையாடல் நடத்தப்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் தங்களுடைய விளையாட்டின் நுணுக்கங்களை பகிர்ந்து கொள்வதன் மூலமாக போட்டிகளில் பங்கேற்பதும் அதில் வெற்றி பெறுவதும் மிகவும் சுலபமாகி விடும் என்பது மாதிரியான விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. 

Similar News