அமெரிக்கா அமைப்புகளுடன், உலக சாதனை முயற்சியில் நடைபெற்ற முத்தமிழ் கலைவிழா!

Update: 2021-06-11 12:43 GMT

தில்லி இலக்கியப் பேரவை மற்றும் தமிழ் அமெரிக்க தொலைக்காட்சி அமைப்புகளுடன் இணைந்து இணையவழியில் தொடர்ந்து 720 மணி நேரம் தமிழ் பற்றி உரை நிகழ்த்தி முத்தமிழ் விழாவாக உலக சாதனைக்கு முயன்றது. அதனை ஒரு உலக சாதனையாக மாற்றிட ஆரஞ் உலக சாதனை அமைப்போடு இணைந்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பஹ்ரைன் முத்தமிழ் சொல்வேந்தர் மன்றத்தின் தலைவர் சொல்வேந்தர் பாலசுப்பிரமணியன் அவர்கள் இலக்கிய செறிவும் தமிழ் இலக்கியங்களும் என்ற தலைப்பில் 45 நிமிடங்களுக்கு தமிழ் இலக்கியத்தின் சிறப்பு அதன் மேன்மை கம்பராமாயணத்தில் இலக்கண பயன்பாடு குறித்து உரை நிகழ்த்தினார்.


மேலும் திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்களின் சிலேடைப்பேச்சு, ஒட்டக்கூத்தருக்கு உண்மையான பெயர் ஒட்டவைத்த கூத்தர், கம்பராமாயண பாடல் நயம் தமிழ் திரைப்பட பாடலில் எப்படி பயன்படுத்தப்பட்டது, அவ்வையார் நான்கு பாடல்களைக்கொண்டு நான்கு கோடி பாடல்களாக கணக்கிட்டு கூறினார் போன்ற சுவைமிகு தகவலைகளை உள்ளடக்கி உரையாற்றினார். அதன் பிறகு திரு. கந்தசாமி செல்வன் அவர்கள் 'மருத்துவத்தில் அன்றும் இன்றும்' என்ற தலைப்பினிலே உரையாற்றினார்கள்.


அடுத்து திரு.ஆ.பிரம்மா நாயகம் அவர்கள் தமிழும் சுவையும் எனும் தலைப்பினிலும் உரையாற்ற தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த திரு.சங்கர் சுப்பிரமணியன் அவர்கள் கவியும் அதன் தாக்கமும் எனும் தலைப்பினில் உரையாற்றினார்கள். தொடர்ந்து திருமதி.சித்ரா சுப்பிரமணியம் அவர்கள் 'மனம் எனும் தோணி' எனும் தலைப்பிலும், புதுச்சேரியினை சார்ந்த திரு.வி.கி.முனுசாமி அவர்கள் 'சுடுகளி மண்சிற்பம்' எனும் தலைப்பினிலும் உரையாற்றினார்கள். நிகழ்வின் ஒருங்கிணைப்பினில் முழுப் பொறுப்பினையும் ஏற்ற தில்லி இலக்கியப்பேரவை பணிகளை செம்மையாக வழிநடத்தியது. 

Similar News