இந்தியாவுடன் கைகோர்த்து கொரோனாவிற்கு எதிராக உதவும் ஆஸ்திரேலிய துணை தூதரகம்.!
நாம் இருக்கும் இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுடன் தற்பொழுது ஆஸ்திரேலிய துணை தூதரகம் கொரோனாவிற்கு எதிராக உதவுவதற்கு முன்வந்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, இந்தியாவுடன் கைகோர்க்க சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் தற்பொழுது முன்வந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக தற்போது வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி(CMC) மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கைகள் அமைக்கவும், மற்றும் உணவு இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் சமூக நல நிறுவனமான கேப்டோஸ்ட் நிறுவனத்திற்கு ஆதரவை ஆஸ்திரேலியா தற்பொழுது தந்து உள்ளது.
இதுகுறித்து கிறிஸ்டின் மெடிக்கல் கல்லூரி நிர்வாகம் கூறுகையில், "ஆஸ்திரேலியா தூதரகம் சார்பில் தற்போது வரை 12 படுக்கைகள் கொண்ட ICU வசதிகளை அமைக்க சுமார் 12 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும் சமூக நல ரீதியாக இயங்கும் கேப்டோஸ்ட் சங்கங்களில் இருக்கும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் வாழ்வாதார ரீதியாக சுமார் 8 லட்சத்தையும் வழங்கியுள்ளது. மேலும் இது குறித்த ஆஸ்திரேலியா துணை தூதர் கிர்லேவ் கூறுகையில், "நாங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிதி தேவைப் படுபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். மேலும் இந்த நோய் தொற்று காரணமாக உரிய சேவைகளை ஏழை மக்களுக்கு வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
கேப்டோஸ்டின் நிறுவனர் யமுனா சாஸ்திரி கூறுகையில், "எங்களுடைய சமூகநல அமைப்புகள் மூலம் இருக்கும் பணியாளர்களுக்கும் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆஸ்திரேலிய தூதரகம் சிறப்பாக எங்களுக்கு உதவி உள்ளது. தாராளமான நிதி கொடைகள் அளித்த தூதரகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி" என்றும் கூறியுள்ளார்.