கத்தார் நாட்டின் துணை பிரதமருடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு.!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் தற்பொழுது கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் அந்த நாட்டின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் S.ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்தியாவில் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு பாதிப்புகளை ஏற்பட்டதால் நாட்டு மருத்துவ பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் கடும் பற்றாக்குறை நிலவி வந்தது. இதற்கு பல நாடுகள் சார்பாக இந்தியாவிற்கு தங்களுடைய நட்பை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு உதவிகளைச் செய்தனர்.
அதில் கத்தார் அரசின் சார்பாகவும் உதவிப் பொருட்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனவே இப்போது பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சார்பில் அதற்கான நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இரு கருப்பு நாடுகளுக்கு இடையே உறவு வலுப்படும் பகுதியில் பல விவாதங்கள் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
இரு தரப்பு உறவு, வருங்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்படும் ஒப்பந்தங்கள், வணிக பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இனி வருங்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவு வலுப்படும் என்றும் இதிலிருந்து தெரியவருகிறது.