நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் : அமெரிக்க அதிபரின் பரிந்துரை.!

Update: 2021-06-18 13:01 GMT

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் அவர்கள் ஆட்சியில் இந்தியாவை சேர்ந்த வம்சாவளிகளுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு அவர்கள் பணியமர்த்தப்பட்டும் வருகிறார்கள். பல்வேறு உயரிய பதவிகளில் கூட இந்திய வம்சாவளிகளுக்கு ஒரு சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட பலரும் இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். 


அந்த வகையில் தற்போது, அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியான சரளா வித்யா நாகலாவை அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தின் நீதிபதியாக சரளா வித்யா நாகலாவை அங்கீகரிக்கலாம் என அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் பரிந்துரைத்தார். வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவரை நீதிபதியாக்கும் பரிந்துரைக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்கவேண்டும்.


சரளா வித்யா நாகலா, 2017 முதல் அதே கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட அட்டார்னியின் அலுவலகத்தில் குற்றப்பிரிவில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். முதலில் இவர் 2012-ல் அமெரிக்க அட்டார்னி அலுவலகத்தில் சேர்ந்து, வெறுக்கத்தக்க குற்றங்கள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். செனட் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் முதல் தெற்காசிய நபர் என்ற பெருமையை இவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News